முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

31-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ம் தேதி முதல்வர், துணை முதல்வர் மலர் அஞ்சலி

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்கின்றனர்.

மலர் வளையம்...

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளான 24-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

நிர்வாகிகள் பங்கேற்பு

அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து