முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் விவசாய கடன் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றதும் கமல்நாத் முதல் கையெழுத்து

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால் : மத்திய பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், விழா மேடையில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவின் கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட கமல்நாத், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து