முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம் - வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயித்துள்ளது. நேற்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது.

விராட் கோலி...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அற்புத சதத்தின் உதவியால், 283 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.  இதன்படி, 43 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில்,  48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது.

243 ரன்களுக்கு அவுட்...

இந்த நிலையில்,  நேற்று 4-வது நாள் ஆட்டம் துவங்கியது. உஸ்மான் காவ்ஜா (72 ரன்கள்) டிம் பெய்ன் (37 ரன்கள்) ஆகியோர் சீரான இடை வெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 93.2 ஓவர்களில் 243 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இந்திய அணியில் அதிகபட்சமாக முகம்மது சமி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

287 ரன்கள் இலக்கு...

இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்தது. போட்டியில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு உள்ளதால்,  இந்த டெஸ்ட் போட்டியும் பரபரப்பான கட்டத்தை எட்டியது. நேற்று 41 ஓவர்களை எதிர்க்கொண்ட இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டநேர முடிவில் 112 ரன்கள் எடுத்திருந்துத. இந்திய அணிக்கு வெற்றிப்பெற இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியில் விஹாரி 24 ரன்களுடனும்,  ரிஷாப் பன்ட் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இன்று கடைசி ஒருநாள் இருக்கும் நிலையில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடும் என்றே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து