முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி-20 கிரிக்கெட்: வங்காள தேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சியால்ஹெட் : முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 130 ரன் இலக்கை 10.5 ஓவரிலேயே எட்டி, வங்காள தேசத்தை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்.

பேட்டிங் தேர்வு

வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வாங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி தமிம் இக்பால். லித்தோன் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 5 ரன்னிலும், லித்தோன் தாஸ் 6 ரன்னிலும், சவுமியா சர்கார் 5 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி 43 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

முன்னிலை...

அவருக்குப்பின்னால் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியே வங்காள தேசம் 19 ஓவரில் 129 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்ரெல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 55 பந்துகள் மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது ஆட்டம் 20-ம் தேதி நடக்கிறது. வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 2 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து