முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலித்த 2 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த கென்யா இளைஞர்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

நைரோபி, கென்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தாம் காதலித்த 2 பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கென்யாவின் கஜியாடோ மாகாணத்தை சேர்ந்த மாகோ என்ற 27 வயது இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் திருமணம் செய்ய விரும்பிய அவர் இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய பரஸ்பரம் ஒப்பு கொண்டனர். அதன்படி உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ, அனைவரின் முன்னிலையில் அந்த இளைஞர் தமது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவரையும் எவ்வித குறையும் இன்றி மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளப் போவதாகவும் மணமகன் மாகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் இரண்டு மணப்பெண்களும் ஜாலியாக ஆடிப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து