முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோவிலில் திருநங்கைகள் தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை, சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு இருமுடி கட்டி தரிசனம் செய்ய வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அங்கு 2 மாதத்திற்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது.  இந்நிலையில், கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விசாரணையில் அவர்களின் பெயர் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது

மேலும், சபரிமலைக்கு ஏன் செல்லக் கூடாது, சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளதே என திருநங்கைகள் கேள்வி எழுப்பியதற்குச் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவர்களைப் பாதுகாப்புடன் எரிமேலிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் கோட்டயத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

திருநங்கைகள் சேலை அணிந்திருப்பதால், கோயிலுக்கு அனுமதிக்க முடியாது. ஆதலால் ஆண்கள் உடை அணிந்த பின்பு வாருங்கள் என்று போலீசார் அவமதிப்பு செய்தனர் என்று திருநங்கைகள் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் திருநங்கைகள் நான்கு பேரும், ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட மூவர் குழுவில் உள்ள போஸீஸ் டி.ஜி.பி. ஹேமச்சந்திரனை நேற்று முன்தினம் சந்தித்து முறையிட்டு தங்களுக்கு சபரிமலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வேதனைத் தெரிவித்தனர். இதையடுத்து, கோயில் தந்திரிகள் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தாரிடம் ஹேமச்சந்திரன் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவர்களின் அனுமதியின் பெயரில் திருநங்கைகள் 4 பேரையும் சாமி தரிசனம் செய்ய சம்மதித்தனர்.

எர்ணாகுளத்தில் இருந்து எருமேலிக்கு நேற்று அதிகாலை வந்த 4 திருநங்கைகள் நேற்று காலை பம்பைக்கு சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலை அணிந்து செல்லக் கூடாது என்று போலீஸார் தெரிவித்த நிலையில் நேற்று திருநங்கைகள் சேலை அணிந்து சபரிமலைக்கு காலை 8 மணிக்கு பம்பையில் இருந்து புறப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருநங்கைகள் நான்கு பேரும், 9.45 மணிக்கு 18 படிகளில் ஏறி சாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதன்பின் அங்கிருந்து அவர்கள் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து