முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்தர மருத்துவக் கல்லூரியுடன் தெலுங்கானாவில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரியும் உருவாக்கப்படுகிறது.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் தெலங்கானா மாநிலம் பீபி நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதரத்துறை அமைச்சர் நட்டா கூறியதாவது,

தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1,264 கோடி ரூபாயிலும், தெலுங்கானாவில் அமையும் மருத்துவமனை ரூ. 1,028 கோடி செலவிலும் கட்டப்படுகிறது. இரண்டு மருத்துவமனைகளுக்கும் இயக்குநரை நியமித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

750 படுக்கையுடன் அமையும் இந்த மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரியும் ஏற்படுத்தப்படுகிறது. 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், 60 நர்சிங் இடங்களும் இந்த மருத்துவ கல்லூரியில் ஏற்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி மொத்தம் 20 பன்னோக்கு சிறப்பு மருத்துவ துறைகளும் கொண்டதாக இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திகழும். இதன் மூலம் ஒரு மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து