முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று 'ஆதார்' வழங்கும் திட்டம் - 434 அலுவலர்களுக்கு கணினி வழங்கி முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று 'ஆதார்' வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 434 அலுவலர்களுக்கு கணினி வழங்கி தொடங்கி வைத்தார்.

ஆதார் கிட்ஸ்...

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று ஆதார் பதிவு செய்யும் வகையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆதார் கிட்ஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். மேலும்  கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போன்ற பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்திட அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட கைபேசிகளை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

மின்னணு முறையில்...

அங்கன்வாடி மையங்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க இணை உணவினையும், தமிழக அரசு வழங்கி வருகிறது. இப்பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்தும் விதமாகவும், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திடும் வகையிலும், அங்கன்வாடி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட கைபேசிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கைபேசிகளை வழங்கி துவக்கி வைத்தார். இதன்மூலம், பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

இல்லங்களுக்கே சென்று...

ஆதார் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான பதிவுப் பணிகள் இனி வருங்காலங்களில், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளும் வகையில், 434 குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதி ஏற்படுத்தும் வகையில் 13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவிலான கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1302 ஆதார் கிட்ஸ்களை 434 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 7 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவுகள் செய்யும் வசதியும் மற்றும் பொதுமக்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து