முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கள்ளிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப்போட்டி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினார்:

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப் போட்டியில் கலந்து கொண்டு கோலமிட்டு தங்களது திறமைகளைவெளிப்படுத்திய பொதுமக்களுக்கு கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமங்கலம் நகரம்,திருமங்கலம் ஒன்றியம்,கள்ளிக்குடி ஒன்றியம்,டி.கல்லுப்பட்டி ஒன்றியம்,பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக அம்மா பேரவை சார்பில் மாபெரும் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த கோலப்போட்டியை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் தங்களது வாசல்களில் இரட்டைஇலை கோலமிட்டும் வீதியெங்கும் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் படத்தை கோலங்களிட்டும் தங்களது திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்தினார்கள்.இதையடுத்து கோலப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும், சிறந்த முறையில் கோலமிட்டவர்களுக்கும்,சாதனை படைத்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுமென தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருந்தார்.இதையடுத்து அமைச்சரின் அறிவிப்பின்படி திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட   கள்ளிக்குடி சத்திரம்,வில்லூர்,மறவபட்டி,சித்தூர் மற்றும் தென்னமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டிகளில் பங்ககேற்றவர்கள் அனைவருக்கும்,சிறப்பாக கோலமிட்டவர்களுக்கும் சிறப்பு பரிசாக அழகிய சில்வர் பாத்திரங்களையும் வெப்பந்தாங்கி பாத்திரங்களையும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.முன்னதாக பரிசுகளை வழங்கிட வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டுவந்து ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர்.
அப்போது மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட சார்புஅணிச் செயலாளர்கள் திருப்பதி,போத்திராஜா,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கட்சி நிர்வாகிகள் பிரபுசங்கர்,ரவி,கண்ணன்,அழகர்,வில்லூர் சரவணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னஇருளப்பன்,வி.ஏ.கந்தசாமி,வக்கீல்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன்,முருகன்,வேல்ராமகிருஷ்ணன், அன்னமுத்து, ராமையா, ராஜா,கோடீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து