முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 ஐ.பி.எல். ஏலம்: விலை போகாத யுவராஜ், பிரெண்டன் மெக்கலம் அதிக விலை போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஜெய்ப்பூர் : ஐ.பி.எல். எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் வெளிநாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள், ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது.

70 வீரர்கள் தேர்வு

2019 ஆம் ஆண்டுக்கான தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 50 பேரும் வெளிநாட்டு வீரர்கள் 20 பேரும் என 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் அணி ரூ.20.95 கோடியையும், பெங்களூரு அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா அணி ரூ.15.20 கோடியையும், மும்பை அணி ரூ.11.15 கோடியையும், ஐதராபாத் அணி ரூ. 9.70 கோடியையும்,சென்னை அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிடலாம்.

வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. கடந்த 11 வருடமாக ஐ.பி.எல். ஏலத்தை நடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லி இந்த முறை நடத்தவில்லை. ஹக் எட்மீட்ஸ் என்பவர் இந்த வருட ஏலத்தை நடத்துகிறார்.

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு:-

* இந்திய அணி வீரர் ஹனுமான் விகாரியை ரூ. 2 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.
* ரூ.50 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கபட்ட சிம்ரான் ஹெட்மியர் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியால் ரூ. 4.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அடிப்படை விலையில் இருந்து எட்டு மடங்கு விலை போய் உள்ளார்.
* பிரெண்டன் மெக்கலம் விலைபோகவில்லை.
* மார்ட்டின் குப்தில் விலைபோகவில்லை.
* இந்திய வீரர் யுவராஜ் சிங் விலை போகவில்லை.
* மேற்கிந்திய தீவு வீரர்  கார்லோஸ் பிராட்வேட் ( அடிப்படை விலை ரூ.75 லட்சம்) ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு விலை போனார்.
* குர்கீரத் சிங்கை (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) ரூ. 50 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணி எடுத்தது.
* கிங்ஸ் பஞ்சாப் அணி மோயஸ் ஹென்றியை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது.
* ஆல் ரவுண்டர் அக்சர் படேலை டெல்லி அணி ரூ. 5 கோடிக்கு ஏலம் எடுத்தது.
*   சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஜானி பேர்ஸ்டோவை ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
* வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன்,  கிங்ஸ்  லெவன் பஞ்சாப் அணியால் ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து