தங்கம் விலை குறைந்தது

புதன்கிழமை, 19 டிசம்பர் 2018      வர்த்தகம்
gold 2017-12 31

சென்னை, சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,704-க்கு விற்பனையானது.

சில நாட்களாக தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. கடந்த 11-ம் தேதி ஒருபவுன் ரூ.24 ஆயிரத்து 192 ஆக இருந்தது. பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. திங்கள் கிழமை பவுன் ரூ.23 ஆயிரத்து 944-க்கு விற்றது. நேற்று முன்தினம் பவுனுக்கு 56 குறைந்து ரூ.23 ஆயிரத்து 888 ஆக இருந்தது. நேற்று அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 704-க்கு  விற்பனையானது.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து