முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாடியில் இருந்து ரூ.18 லட்சத்தை வீசிய ஹாங்காங் இளைஞர் கைது - ஏழைகள் பயன் பெற எறிந்ததாக வாக்குமூலம்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கை சேர்ந்த வாங் சிங் கிட், மாடி மீது ஏறி நின்று மக்கள் மீது 18 லட்சம் ரூபாயை வீசி எறிந்தார் . வாங் சிங் கிட் கிரிப்டோகரன்சிகளில் செய்த முதலீடு மூலம் நிறைய கோடிகளை சம்பாதித்து உள்ளார். அதே போல் புதிய புதிய கிரிப்டோகரன்சிக்கு இவர் கொடுத்த விளம்பரங்கள் மூலம் நிறைய வருமானம் பெற்றார் . தற்போது இவரது வங்கி கணக்கில் சில கோடிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில்தான் இவர் ஹாங்காங்கின் ஷாம் ஷு பேய் என்ற பகுதியில் உள்ள மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு மக்கள் மீது 18 லட்சம் ரூபாயை வீசி எறிந்துள்ளார். இதனால் உடனே அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. கீழே கூடிய மக்கள் அவர் துாக்கி எறிந்த பணத்தை சண்டையிட்டு எடுத்துக் கொண்டு இருந்தனர். இது எல்லாம் கிரிப்டோ கரன்சிகளை விளம்பரம் செய்ததன் மூலம் இவர் ஈட்டிய பணம் என்று கூறப்படுகிறது. இதை மக்கள் சண்டையிட்டு எடுத்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்நிலையில் அவர் பணத்தை துாக்கி எறிந்த சில மணி நேரங்களில் பொது அமைதியை கெடுத்ததாக கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், மக்களுக்கு உதவவும், ஏழை மக்கள் பயன் பெறவும், ஒரு ராபின் ஹுட் போல செயல்பட வேண்டும் என்று ஆசையில் பணத்தை வீசி எறிந்ததாக கூறியுள்ளார். இவர் கிரிப்டோ கரன்சியை வைத்து மோசடி செய்ததாக புகாரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து