முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்கார் பட விவகாரம்: இயக்குநர் ஏ.ஆர். முருகதாசுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : சர்கார் பட விவகாரம் தொடர்பான வழக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் அமைத்துள்ளதாக பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன், இம்மனுவை விசாரித்து, ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்தார். கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்றும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏ.ஆர்.முருகதாசுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து