எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மோடி மீதான பயமே காரணம்: கட்காரி

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2018      அரசியல்
NITIN 2018 01 02

புது டெல்லி, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீதான பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,

3 மாநில தேர்தல்களில் பா.ஜ.க. பெற்றதை நான் தோல்வியாகவே பார்க்கவில்லை. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. - காங். இடையேயான வேறுபாடு மிக குறைந்த தொகுதிகளே. எங்களிடம் ஏதாவது குறைகள் இருந்தால், அதை சரி செய்து வரும் லோக்சபா தேர்தலுக்காக பணியாற்றுவோம். நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.

சமரசம் மற்றும் வரம்புகள் இடையேயான விளையாட்டுதான் அரசியல். அவர்களால் எங்கள் கட்சியை வீழ்த்த முடியாது என்று காங்கிரசுக்கு தெரியும். அது சந்தோசத்துடன் உருவான கூட்டணி இல்லை. வேறு வழியின்றி அமைக்கப்பட்ட கூட்டணி. மோடி மற்றும் பா.ஜ.க. மீது உள்ள பயத்தால், ஒன்றை ஒன்று புறக்கணித்து வந்த கட்சிகள் தற்போது ஒன்றிணைந்துள்ளன.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு பதில் நான் பிரதமர் வேட்பாளராக்கப்பட உள்ளேன் என்பது தவறான தகவல். அதற்கு வாய்ப்பே இல்லை. தற்போது நான் இருக்கும் நிலையிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து