முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. கருத்துக்கு சச்சின் அதிருப்தி

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் நடந்த பெர்த் ஆடுகளம் சராசரியான ஆடுகளம் என்று ஐ.சி.சி கூறியதற்கு சச்சின் தெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தின் தன்மை எப்படி இருந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சொல்வது வழக்கம். இதன்படி பெர்த் ஆடுகளம் குறித்து பெரிய அளவில் திருப்தி அடையாத ஐ.சி.சி. சராசரியான ஆடுகளம் என்று கூறியது. இதற்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், சுவாரஸ்யத்தை உருவாக்கவும் பெர்த் போன்ற ஆடுகளங்கள் தான் தேவையாகும். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் உண்மையான திறமையை சோதித்து பார்க்கக் கூடிய ஆடுகளமாக அது அமைந்தது. அதனால் இதை சராசரி ஆடுகளம் என்று சொல்வது சரி அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து