முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர்களில் பொல்லாக்கை பின்னுக்கு தள்ளி ஸ்டெயின் முதலிடம் பிடித்தார்

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் படைத்துள்ளார் .

421 ரன்கள் வீழ்த்தி...

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் டெஸ்ட் போட்டியில் 421 ரன்கள் வீழ்த்தி பொல்லாக் உடன் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்திருந்தார். கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்டில் ஸ்டெயின் விளையாடினார். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனால் பொல்லாக் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தார் ஸ்டெயின்.

செஞ்சூரியன் டெஸ்ட்

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஸ்டெயின் தனது 4-வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் பகர் சமானை 12 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து