முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் மாரடைப்பு: நடிகர் சீனு மோகன் காலமானார் !

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : இறைவி, மெர்சல், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்த சீனு மோகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 61. இவர் 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னுரிமை

கிரேசி மோகனின் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் மோகன். இவர் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திர பெயரில் நடிப்பதால் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார். 1979-ல் கிரியேஷன்ஸ் நாடகக் குழு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அக்குழுவில் நடித்து வந்தார் சீனு மோகன். நாடகத்தில் இருந்து சினிமாவிலும் முகம் காட்டத் தொடங்கிய சீனு மோகன், அஞ்சலி, தளபதி, வருஷம் 16 உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் இவர் மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வந்தார்.

மெர்சல் படத்தில் நடித்தவர்

நாடகங்களை தொடர்ந்து கிரேசி மோகன் குழு தொலைக்காட்சி தொடர்கள் எடுத்தது. அந்த தொடர்களிலும் நடித்தார் சீனு மோகன். மேலும் பல குறும்படங்களிலும் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார்.  அதன் பிறகு ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, ஸ்கெட்ச், வடசென்னை, மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

மாரடைப்பு

இதுவரை 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த சீனு மோகனை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் நேற்று காலை மாரடைப்பு காரணமாக சீனு மோகன் காலமானார். அவருக்கு வயது 61. அவரது மறைவுக்கு திரையுலகினரும், நாடக நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து