முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல தெலுங்கு முன்னணி நடிகரின் வங்கி கணக்குகள் முடக்கம்

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      சினிமா
Image Unavailable

ஐதராபாத், தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, வரிகள் நிலுவை வைத்திருந்ததையடுத்து, அவரது இரண்டு வங்கிக் கணக்குகளை சரக்கு மற்றும் சேவை வரித்துறை முடக்கியுள்ளது. இது குறித்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2007-2008 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக செயல்பட்டதுடன், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வருவாய் ஈட்டிய மகேஷ் பாபு அதற்கான உரிய வரித்தொகையை செலுத்தவில்லை. 18.5 லட்சம் ரூபாய் மகேஷ் பாபு வரி நிலுவையாக வைத்துள்ளார்.  இதன் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரித்துறை, மகேஷ் பாபுவுக்கு சொந்தமான இரு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. வரிகள், வட்டி மற்றும் அபராத தொகை என சேர்த்து மொத்தம் மகேஷ் பாபு ரூ.73.75 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து  ஜி.எஸ்.டி துறை மூத்த அதிகாரி கூறியதாவது,

வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக உயர் அதிகாரியிடம் முறையிட்டு எந்த அவகாசத்தையும் மகேஷ் பாபு பெறவில்லை. எனவே, மகேஷ் பாபுவின் வங்கிக்கணக்கை நாங்கள் முடக்கியதோடு, நிலுவைத் தொகையை பெறத் தொடங்கியுள்ளோம்.

ஆக்ஸிஸ் வங்கியில் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான கணக்கில் இருந்து ரூ. 42 லட்சம் மீட்டுள்ளோம். மீதமுள்ள தொகை மகேஷ் பாபு கணக்கு வைத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இன்று தர வேண்டும். இல்லாவிடில் வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். வரி நிலுவைத்தொகையை செலுத்தாத வரை மகேஷ் பாபுவால் தனது வங்கிகணக்குகளை கையாள முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து