முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் கலெக்;டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018 ஜனவரி  முதல் டிசம்பர் வரை 666.79 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.  இது இயல்பான மழையளவை விட 163.21 மி.மீ குறைவாகும்.  நடப்பாண்டில் 1,25,540 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 12,337 ஹெக்டேர் பரப்பில் சிறுதானியங்களும், 4,164 ஹெக்டேர் பரப்பில் பயறு வகைகளும், 3,148 ஹெக்டர் பரப்பில் எண்ணெய் வித்துக்களும், 2,186 ஹெக்டேர் பரப்பில் பருத்தியும் பயிரிடப்பட்டுள்ளது.  உரம் இருப்பினை பொறுத்தவரையில் கூட்டுறவு சங்கங்களில் 2,532 மெ.டன் அளவிலும், தனியார் உரக்கடைகளில் 1,620 மெ.டன் அளவிலும் என மொத்தம் 4,152 மெ.டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  2016-2017 -ஆம் ஆண்டில்  பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,28,669 விவசாயிகளுக்கு 1,22,208 ஹெக்டேர் பரப்பில் நெல், மிளகாய் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கும் பயிர்காப்பீடு செய்யப்பட்டு காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக இதுவரை ரூ.528.90 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  மேலும், 2017-18ம் ஆண்டில் 1,50,512 விவசாயிகள் மூலம் 1,22,997 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களுக்கும், 2018-19ம் ஆண்டில் 2,26,427 விவசாயிகள் மூலமாக 1,13,016 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிருக்கும் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில், 2016-17ம் ஆண்டில் விடுபட்ட கிராமங்களுக்கும், 2017-18ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கிட வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  2016-17ம் ஆண்டில் விடுபட்ட  கிராமங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வருகின்ற பொங்கல் பண்டிகைக்குள் கட்டாயம் வழங்கிட வேண்டுமென வேளாண்மை பயிர் காப்பீடு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதேபோல, 2017-18ம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையினை காலம் தாழ்த்தாமல் நிர்ணயித்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதில் மேலும் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் விவசாயிகள் சார்பாக பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையினை பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார்.
 முன்னதாக மாவட்ட கலெக்டர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு ரூ.84,600 அரசு மானியத்தில் சுழற்கலப்பை இயந்திரங்களையும், 1 விவசாயிக்கு ரூ.10ஆயிரம் அரசு மானியத்தில் ஆயில் என்ஜின் இயந்திரத்தையும், 2 அம்மா மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.20ஆயிரத்திற்கான காசோலையினையும் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசீலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சேக் அப்துல்லா, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திரு.மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து