முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் தேனியில் அதிமுக பூத் கமிட்டியினர் ஆலோசனை கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி  -தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பெரியகுளம் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனியில் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று மண்டலம் வாரியாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பேசும்போது, மண்டல பொறுப்பாளர்கள் பூத் கமிட்டியினர் அந்தந்த பூத்துக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளனரா என்று ஆராய வேண்டும். மேலும் பூத் கமிட்டியில் அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் இருக்கும் வகையில் ;பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று நமது கட்சியினர், கழகத்திற்கு ஆதரவானவர்கள்;, மாற்று கட்சியினர் என பிரித்து குறிப்பெடுக்க வேண்டும் என்றும், இப்பணிகளே நாம் அடிப்படையாக செய்ய வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்தவர்களே உண்மையான அதிமுக தொண்டர்களாகும். நமக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மா உறுதுணையாக இருக்கும். இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் நாமே வெற்றி பெறுவோம் என்று பேசினார்.  முன்னதாக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் முன்னிலையில் அமமுக, தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், நகர துணை செயலாளர் ரெங்கநாதன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர்,  அம்மா பேரவை நகர செயலாளர் சுந்தரபாண்டியன்,  எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் மணவாளன்,  இளைஞரணி கார்த்திக்,  தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை  செயலாளர்கள் கவியரசன், கார்த்திக்குமார், வீரபாண்டி வீரமணிகர்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து