முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திடீர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் திடீரென்று சென்றார். அரசு ஆஸ்பத்திரியில் பொதுவார்டு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அங்குள்ள பதிவேடுகளை ஆய்வுசெய்தததோடு, நோயாளிகளிடமும்,டாக்டர்களிடமும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கிக்குn சன்ற அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரத்த பாக்கெட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் விபரங்களையும், பதிவேடுகளில் உள்ள விபரங்களையும் ஒப்பிட்டு பார்த்து அதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். ரத்த வங்கியில் உள்ள ரத்தம் முறையான பரிசோதனைக்கு பின்னர் சேகரிக்கப்பட்டுள்ளதா, ரத்தம் அளித்தவர்கள் விபரங்கள், யார் யாருக்கு ரத்தம் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விபரங்களை ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களி உள்ள பரிசோதனையாளர்கள் மற்றும் செவிலியர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு உரிய ஆலோசணைகளை வழங்கினார். இதன்பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நிருபர்களிடம கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
      விரைவில் மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட உள்ளதால் அதற்கேற்ப முழு அளவில் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெறும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போதும், விபத்து போன்ற அவசர கால சூழ்நிலையின்போதும் பயன்படுத்தும் வகையில் ரத்தம் வழங்கிட ஏதுவாக 600 யூனிட் சேமிப்பு வசதி கொண்ட ரத்த வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான் ஒரு டாக்டர் மட்டுமல்லாது மதுரை மருத்துவ கல்லூரி பேராசிரியர் என்ற முறையில் ரத்த வங்கியில் விரிவான ஆய்வு மேற்கொண்டேன். ரத்த மாதிரிகள், சேகரிக்கபட்ட விபரம், ரத்தம் அளித்தவர் விபரம், உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்ற விபரம் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளேன். இந்த ஆய்வில் அனைத்து விபரங்களும் முழுமையாக உள்ளதை அறிந்தேன். ரத்த வங்கியில் ரத்தம் பெறும்போதும், ரத்தம் வழங்கும்போதும் உரிய விதிமுறைகளை கண்ணும் கருத்துமாக பின்பற்றஉத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். அப்போது அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மலையரசு உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், ஜெயக்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து