Idhayam Matrimony

அப்துல் கலாம் குடும்பத்துடன் பாபா ராம் தேவ் சந்திப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

     ராமேசுவரம்,- உலக யோக நிகழ்ச்சிக்காக ராமேசுவரம். வந்த பாபா ராம்தேவ் ராமேசுவரம் பகுதியிலுள்ள முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் குடும்பத்தை சந்தித்து நலம் விசாரித்தார்.
 ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தில் உலக யோக நிகழ்ச்சி 25 ஆம் தேதி நடைபற்றது.இதில் தலைமை ஏற்று நடத்துவதற்காக பாபா ராம்தேவ்  வருகை தந்தார்.பின்னர்  இராமகிருஷ்ணா மடத்தில் மூன்று நாட்கள் யோக பயிற்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் யோக பயிற்ச்சி செய்து நோயற்ற வாழ்விற்கு சிறந்த மருந்து யோக பயிற்ச்சி என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும்,பள்ளி மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து பாபாராம்தேவ்  ராமேசுவரம் பகுதியிலுள்ள மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல். கலாம் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது அண்ணன் முகமது முத்து மிரான் மரைக்காயர் மற்றும் பேரன் சேக்சலீம் உள்பட குடும்பத்தினரை சந்தித்து  நலம் விசாரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து