முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ. 2 லட்சம் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

மதுரை, -    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட  சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
   கடந்த  சில நாட்களுக்கு முன்பு சாத்தூர் மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிற்கினங்க மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த பெண்ணின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனையொட்டி முதலமைச்சர் ஆணைக்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மதுரை  அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணிற்கு நேரில் சென்று ஆறுதல்  கூறி மருத்துவமனை முதல்வரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணியிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில்:-  
           முதலமைச்சர் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர்களிடத்தில் தொடர்ந்து மருத்துவகிசிக்சை குறித்து கேட்டு வருகிறார். நீங்கள் மகப்பேறு காலம் வரை சிறப்பான முறையில் சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.  அதன் படி உங்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது உங்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது என்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்குகிறேன். உங்களுக்கு எந்த தேவையானாலும் கேளுங்கள் உங்களின் அண்ணனாக நிச்சயம் அதை செய்து தருவேன் என்று கூறினார். அப்போது அந்த பெண் எனக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த கர்ப்பிணி பெண் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் கூறினார்.
  அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, எதிர்கோட்டை மணிகண்டன்,  வேல்முருகன், பூமிநாதன், முத்துராமலிங்கம், சாத்தூர் நகர செயலாளர் வாசன், உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து