சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2018      வர்த்தகம்
petrol -diesel price 2018 5 23

சென்னை : சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து நேற்று ரூ.71.41க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்ய அரசு அனுமதி அளித்த நிலையில், ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனையானது. அதன்பின் தொடர்ந்து இவற்றின் விலை குறைய தொடங்கியது. இதனால் ரூ. 85-க்கும் கூடுதலாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை ரூ.75-க்கும் குறைவாக விற்கப்பட்டது. இதேபோன்று டீசல் விலையும் குறைந்து உள்ளது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்று முன்தினம் லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் குறைந்து ரூ. 71.62க்கும், டீசல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.66.59க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை முந்தைய நாள் விலையை விட லிட்டர் ஒன்றுக்கு 21 காசுகள் குறைந்து ரூ.71.41க்கும், டீசல் விலை 24 காசுகள் குறைந்து ரூ.66.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து