முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் இந்தி நடிகர் காதர்கான் காலமானார்

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2019      சினிமா
Image Unavailable

கனடா : பழம்பெரும் இந்தி நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான காதர் கான் நாள்பட்ட நோய் காரணமாக கனடாவில் காலமானார். அவருக்கு வயது 81.
இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய காதர் கானின் மகன் சர்ஃபராஸ்,

எங்களின் தந்தை எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். தொடர்ச்சியான உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டவர், டிசம்பர் 31-ம் தேதி 6 மணிக்கு காலமானார். 16 முதல் 17 வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர் கோமாவுக்குச் சென்றார்.அந்த நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவரின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் கனடாவிலேயே நடைபெறும். அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிஎன்று தெரிவித்துள்ளார்.

காபூலில் பிறந்த காதர் கான், 1973-ல் ராஜேஷ் கண்ணாவின் 'தாக்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 300 படங்களுக்கும் மேல் நடித்த அவர், சுமார் 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.திரைக்கதை ஆசிரியராக மன்மோகன் தேசாய் மற்றும் பிரகாஷ் மேராவுடன் காதர் கான் ஏராளமான படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து