முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தங்கல் நகராட்சியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்கோபுர விளக்குகள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 2 ஜனவரி 2019      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி.   திருத்தங்கல் நகராட்சியில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எம்பி தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகளை விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சேர்வைகாரன்பட்டி, கொத்தனேரி, நடையனேரி, எம்.புதுப்பட்டி கிருஷ்ணாபுரம், ரெங்கபாளையம், விளாம்பட்டி, பூவநாதபுரம், சாட்சியாபுரம் ஆகிய 9 கிராமங்களில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எம்பி தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ஒவ்வொறு கிராமத்திலும் தலா ரூ.3.30 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்கோபுர விளக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இந்நிலையில் திருத்தங்கல் நகராட்சியில் மங்கம்மா சாலை, அண்ணா காலனி, அண்ணா காலனி மணிமாறன் வீடு அருகில். பெரியார் காலனி, அம்மா உணவகம் அருகில், அக்ராஹாரா தெரு, சக்திமாரியம்மன் கோவில், இந்திரா நகர் மெயின் ரோடு, சத்யா நகர், கண்ணகி காலனி, எம்ஜிஆர் நகரில் இரண்டு தெரு பகுதிகள் என மொத்தம் 12 பகுதிகளில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எம்பி தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி தலா ரூ.3.50லட்சம் என மொத்தம் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த புதிய விளக்குகள் திறப்பு விழாவிற்கு ராதாகிருஷ்ணன் எம்பி தலைமை வகித்தார். உயர் மின்கோபுர விளக்குகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையாளர் சுவாமிநாதன், பொறியாளர் சாகுல்ஹமீது,  அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் தனுஷ், திருத்தங்கல் அம்மா பேரவை நகர செயலாளர் ரமணா, கூட்டுறவு சங்க தலைவர்கள் அ.செல்வம், கிருஷ்ணமூர்த்தி, நரிக்குடி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உயர் மின் கோபுரம் விளக்குகள் திறக்க வருகை தந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு அனைத்து வார்டுகளிலும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒவ்வொறு வார்டிலும் கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் வாங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து