முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பல்கலை கழக துணைவேந்தராக எம்.கிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்

புதன்கிழமை, 2 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லதுரையின் பதவி நியமனம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 17-வது துணைவேந்தராக
முனைவர் எம்.கிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவிஏற்பு விழாவில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பல்கலை கழக ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுமையான பாட பிரிவுகளை கொண்டு வர வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தை சிறந்த பல்கலைகழகமாக மாற்ற முயற்சி செய்வேன். சிறந்த மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களை கொண்டு வருவேன். மாணவர்களுக்கு நல்ல விடுதி ,உணவகம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன். சிறந்த நூலகம், ஆய்வு கட்டுரைகள் கொண்டு வருவேன்.
சிறந்த பல்கலையாக மாற்ற உழைப்பேன்
 சிறந்த தகவல் தொடர்பை ஏற்படுத்தி தருவேன். நிதி நிலையை பொறுத்து பல்கலைகழகத்தில் சிறந்த சுற்றுசூழலை உருவாக்க முயற்சி செய்வேன். இந்த பல்கலைகழகத்தை மீண்டும் சிறந்த தரமிக்க பல்கலைகழக மாக மாற்ற உழைப்பேன்.அனைவருக்கும் நம்பிக்கைக்குரியவனாக நடந்து கொள்வேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து