முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் லோடுமேனை ஓட, ஒட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-  திண்டுக்கல்லில் லோடுமேனை ஓட, ஓட விரட்டி கும்பல் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் அருள்சாமி(45). இவருக்கு டெய்சி பென்சியா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலையில் தனது முதல் மகளை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பஸ்ஸில் அவரை ஏற்றி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் _ பழனி ரோடு இந்திரா நகர் பகுதியில் அருள்சாமியை வழிமறித்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட தொடங்கினர். அவர் உயிருக்கு பயந்து ஓடியபோதும் விடாமல் துரத்தி வெட்டி சாய்த்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் டவுன் டி.எஸ்.பி. தலைமையில் நகர் மேற்கு போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட அருள்சாமி உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த வருடம் பொன்மாந்துரையைச் சேர்ந்த ராம்கி என்ற ராமகிருஷ்ணன் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் அருள்சாமியின் தம்பி பாஸ்கரன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோமையார்புரத்தில் தனது நண்பர் வீட்டில் இருந்த பாஸ்கரனை ராம்கியின் ஆதரவாளர்கள் வெட்டி படுகொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் தப்பியோடி விட்டார். அதன்பின்னர் தனது அண்ணன் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வந்தார். எனவே அருள்சாமியை வெட்டிக் கொல்ல திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பழிக்கு பழியாக ஒரே ஆண்டில் இச்சம்பவத்தில் 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் புத்தாண்டின் தொடக்கத்திலேயே திண்டுக்கல் நகரில் அதிகாலை நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து