முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத் தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல், மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஆனால் அந்நாடு எதிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது. எதிரிகளை பாதுகாக்கிறது. இதனால் அந்த நாட்டுடன் நல்லுறவை கடைப்பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானின் புதிய அரசுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். காலம் தாழ்த்தாமல் அதனை உடனே செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசிய டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு ஒரு சிறப்பான கடிதம் கிடைத்ததாகவும், கிம் ஜாங் அன்னை விரைவில் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து