முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் சீன அதிபரின் பேச்சால் போர் பதட்டம்

வெள்ளிக்கிழமை, 4 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று கூறிய சீன அதிபரின் பேச்சால், தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சீனா அருகே உள்ளது தைவான் நாடு. ஒரு காலத்தில் தைவான் சீனாவின் அங்கமாக இருந்தது. அங்கு நடந்த உள்நாட்டு பிரச்சினை காரணமாக தைவான் தனி நாடாக மாறியது. ஆனாலும், தைவானை தனி நாடாக இதுவரை சீனா ஏற்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தனி நாடாக ஏற்றுள்ளன. அமெரிக்கா அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது. சீனா தொடர்ந்து தைவான் தங்களது நாட்டின் பகுதி. அதை எங்கள் நாட்டோடு இணைப்போம் என்று கூறி வந்தது.

இந்நிலையில் சீன அதிபர் சி ஜின்பிங் கூறும் போது,

தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான் எங்களது ஒரே குறிக்கோள். தைவானும், சீனாவும் ஒரே நாடுதான். எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றார். இதற்கு, எங்களது நாடு இறையாண்மை கொண்டது. யாரையும் கைப்பற்ற விட மாட்டோம் என்று தைவான் கூறி உள்ளது. சீன அதிபரின் மிரட்டலால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து