முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரசு குறித்து விமர்சனம்: இந்திய வம்சாவளி நடிகரின் எபிசோடுகள் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜ்ஜின் நிகழ்ச்சி ஒன்றில் சவுதி அரசை விமர்சித்த காரணத்துக்காக அவரது நிகழ்ச்சி எபிசோடுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கம், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தடை என்று ஹாலிவுட் உலகில் விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க வாழ் முஸ்லிமான ஹசன் மின்ஹஜ் அமெரிக்காவில் தி டெய்லி ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது பேட்ரியாட் ஆக்ட் என்ற புதிய நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சவுதி அரசை விமர்சித்தும் , சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்தும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சவுதி குற்றச்சாட்டியது. இதனைத் தொடர்ந்து சவுதி அரசின் அழுத்தம் காரணமாக அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் ஹசன் மின்ஹன் ஆதரவாகவும், சவுதி அரேபியா கருத்துரிமையை பறிப்பதாகவும் பலரும் குரல் எழுப்பி உள்ளனர். இதற்கு முன்னர் ஹசன் மின்ஹஜ் அமெரிக்க அதிபர் டிரம்பையும் விமர்சிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து