முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போருக்கு தயார் நிலையில் இருங்கள்! சீன ராணுவத்தினருக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீன ராணுவம் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

தைவான் நாட்டை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பகுதியே தைவான் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். ஆனால், தைவானின் பாதுாப்புக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். இதனால் சீனாவுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜின் பிங், மிக வேகமாக நவீனமாகி வரும் சீன ராணுவம், போருக்கும், எத்தகையதொரு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை இன்று 7 மற்றும் நாளை 8-ம் தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க உள்ள நிலையில் மீண்டும் மோதல் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து