அந்நிய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய வீரர் குல்தீப் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      விளையாட்டு
Kuldip record 2019 01 06

சிட்னி : அந்நிய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய வீரர் குல்தீப் யாதவ் சாதனை படைத்துள்ளார்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104.5-வது ஓவரில் 300 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோஆன் ஆனது. அந்த அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் மொத்தம் 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். இதில் அந்நிய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.  இந்த போட்டியில் கவாஜா (27), ஹெட் (20), பெய்னி (5), லையன் (0), ஹேசில்வுட் (21) என ஆஸ்திரேலிய அணியின் 5 வீரர்களை வீழ்த்தி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து