முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு மது பானங்கள் மீது மேலும் 14 சதவீதம் வரி விதிக்க சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்படுகிறது

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெளிநாட்டு மது பானங்களின் மீது மேலும் 14 சதவீதம் வரி விதிக்க புதிய சட்டத்திருத்தம் தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்படுகிறது.

58 சதவீத வரிக்கு...

தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம் வருமாறு:-
2006-ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்கள் மீது முதலாம் முனை விற்பனையின் மீது மட்டும் வரி விதிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில் மாநிலத்தில் வெளிநாட்டு மதுபானங்களின் முதலாம் முனை விற்பனையின் மீது தற்போது விதிக்கப்படும் 58 சதவீத வரிக்கு கூடுதலாக இரண்டாம் முனையில் விற்கப்படும். வெளிநாட்டு மதுபானங்களின் மொத்த விற்பனைத்தொகை மீது 14.5 சதவீத விரி விதித்திட அரசானது சட்டத்திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

தனிப்பட்ட சட்டத்தை...

மேலும் முத்திரை தீர்வை மாநில அரசால் வசூலிக்கப்படுவது தொடர்பான நடைமுறையை ஒழுங்கு படுத்துவதற்கும் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா கேரளா, ராஜஸ்தான் ஆகிய ஒரு சில மாநிலங்களில் செய்யப்பட்டிருப்பதை போன்ற வாறு இந்த மாநிலத்தில் தனிப்பட்ட சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மசோதாவில் கூறியுள்ளார். இந்த மசோதாக்கள் அனைத்தும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து