முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.140 கோடி மதிப்பில் 555 புதிய பஸ்கள்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ.140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கட்டணமில்லா...

பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது. சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மேலும், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள், கோட்டங்கள் கட்டுதல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

7 பேருந்துகளை...

அந்த வகையில், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை - மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 82 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 112 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகளும், என மொத்தம் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள்...

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹர்மந்தர் சிங், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிருவாக இயக்குநர் பாஸ்கரன், மாநகர போக்குவரத்துக் கழக நிருவாக இயக்குநர் அன்பு ஆபிரகாம், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து