முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விற்பனை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 7 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையானது தென் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையாக திகழ்ந்து வருகிறது இந்த சந்தையில் இருந்து தினந்தோறும் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மிகக்குறைவாக விலையில் விற்பனையான காய்கறிகள் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது ஆனால் தற்போது உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும் அதேபோல் கடந்த வாரம்  ஒருகிலோ 25 ரூபாய்க்கு  விற்பனை ஆன   முருங்கைகாய் விலை உயர்ந்து தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது அதேபோல் சின்ன வெங்காயம் கடந்த வாரம் 15 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது உயர்ந்து 40 ரூபாய் வரை விற்பனை ஆகிறது மேலும் கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் கணிசமாக விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வால் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து