பன்னாட்டுப் பண நிதிய தலைமை பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி கீதா கோபிநாத் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      உலகம்
Geetha Gopinath 2019 01 08

வாஷிங்டன் : பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்திய பெண்மணி கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.எம்.எப். எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் பதவியேற்றுள்ளார். அமெரிக்கவாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடகத்தின் மைசூரில் பிறந்தவர். இவர் ஐ.எம்.எப். எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் 11-வது தலைமைப் பொருளியல் வல்லுநராக ஜனவரி ஒன்று முதல் பொறுப்பேற்றுள்ளார். கீதா கோபிநாத் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து