“காலத்திய காலநிலை மாறுபாட்டுக் கொள்ளைகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      சிவகங்கை
8 alagappa news

காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக புவிஅமைப்பியல் துறையின் சார்பாக “லேட் குவாட்டர்னெரி (இரண்டு மில்லியன் ஆண்டுகள்) காலத்திய காலநிலை மாறுபாட்டுக் கொள்ளைகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்கம் நடைபெற்றது.
  அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் இப்பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.  அவர் தமது உரையில், ஒரு கல்வி நிறுவனத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செம்மையாக அமைந்தால், அந்நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவன வரிசையில் இடம்பெற வாய்ப்புள்ளது.  எனவே அழகப்பா பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  அழகப்பா பல்கலைக்கழகத்தின் எந்த துறையைச் சேர்ந்த ஆசிரியரும் தமது ஆராய்ச்சி மேம்பாட்டிற்கோ அல்லது சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தவோ, சிறப்புப்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்று வர ரூசா – 2.0 திட்டத்தின் கீழ்  நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள் இணைந்து பல்துறை பாடம் சார்ந்த கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் “h” இன்டெக்ஸ்-சில் அதிகமான புள்ளிகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றார்.  மேலும் அழகப்பா பல்கலைக்கழக புவிஅமைப்பியல் துறையானது, பூமியிலுள்ள பல்வேறு வகையான கனிமவளங்களை சேகரித்து அவற்றை காட்சிப்படுத்தியுள்ளது.  19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களை, குறிப்பாக கனிமவளங்களை கண்டறிவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டனர்.  அதனடிப்படையில் இந்தியாவிலுள்ள இயற்கைவளங்களைப்பற்றி அறியமுடிந்தது. புவிஅமைப்பியலும், வரலாறும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.  ஏனென்றால் வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்வதற்கு தொலை உணர்வு அறிவியலும், புவிஅமைப்பியலும் உறுதுணைபுரிகிறது.
  இப்பயிற்சிப் பட்டறையில் மெக்ஸிக்கோ நாட்டின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியதர்சி தெபஜோதி ராய் தொடக்கவுரை ஆற்றினார்.  அவர் தமது உரையில், இப்பயிற்சி பட்டறையானது பூமியில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் நிகழும் வெப்பமயமாதல் பற்றி ஆராய்ச்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை எடுத்துக்கூறினார்.  பூமி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்கிறது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.  அழகப்பா பல்கலைக்கழகம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையை படைத்திருப்பதாகவும், அதற்கு எடுத்துக்காட்டாக ஞளு தரவரிசையில் 20-ஆவது இடத்தைப் பெற்றிருப்பதையும் பெருமையாக குறிப்பிட்டார்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக புவிஅமைப்பியல் துறை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் மேம்பாடு அடைய அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றார்.
  இப்பயிற்சி பட்டறையில் தென்னிந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்களும், முதுநிலை மாணவர்களும் பங்கேற்றனர்.
  புவிஅமைப்பியல் துறைத்தலைவர் முனைவர்.இரா.கரிகாலன் வரவேற்புரை ஆற்றினார்.  உதவி பேராசிரியர் கு.பிரபாகரன் நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து