உலகின் விலை உயர்ந்த வைரம் பதித்த மாடல் அழகியின் உதடு - ஆஸி. நிறுவனம் கின்னஸ் சாதனை

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      உலகம்
aus company guinness 2019 01 09

சிட்னி : உலகின் மிக விலை உயர்ந்த வைரம் பதித்த லிப் ஆர்ட் செய்து வைர நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோசன் டோரோப் டைமண்ட் நிறுவனம் தங்களது 50-வது ஆண்டை முன்னிட்டு கின்னஸ் சாதனை ஒன்றை நடத்தியுள்ளது. 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தனது 50-வது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மேக்அப் ஆர்டிஸ்ட் க்ளார் மாக் உதடுகளில் வைரங்களை பதித்து அசத்தியுள்ளார்.

ஒவ்வொன்றும் மதிப்பு மிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்த ஆர்ட்டைச் செய்துள்ளார். லிப் ஆர்ட்டில் மொத்தம் 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும். மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகள்தான் வைரத்தில் வடிவமைக்கப்பட்டன. இந்த லிப் ஆர்ட் முழுமை பெற இரண்டரை மணி நேரம் ஆகியதாம்.

இதுகுறித்து ரோசன் டோரோப் நிறுவனம் கூறிய போது, பல வழிமுறைகளைப் பின்பற்றி இதைச் செய்ய வேண்டும். அதனால் கவனமுடன் கையாண்டதுதான் மிகவும் நெருக்கடியாக இருந்தது. இருப்பினும் உலக சாதனையைப் பெற்றதில் மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து