வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சல்: மெல்போர்னில் பரபரப்பு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      உலகம்
Mystery Parcel  melbourne 2019 01 09

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய, வெளிநாடு தூதரகங்களுக்கு வந்த மர்ம பார்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், கிரீஸ், எகிப்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, பிரிட்டன், சியாசிஸ்ல், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்கு மர்ம பார்சல் வந்தது. இதையடுத்து போலீஸாருக்கு தூதரக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இது போல் மற்ற தூதரகங்களுக்கும் நேற்று காலை மர்ம பார்சல்கள் வந்தன. பின்னர் அலுவலகத்தை விட்டு அதிகாரிகள் சிதறி ஓடினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், அவசர சேவை பிரிவினர் தயாராக இருந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எந்த வித பார்சலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து