மெக்சிகோ கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு: 7 பேர் பரிதாப பலி

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      உலகம்
Mexico-7-people-killed 2019 01 09

மெக்சிகோ : மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 

மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் இரவு நேரத்தில் ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து