முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஜாராவின் பேட்டிங் இளம் வீரர்களுக்கு ஒரு அளவுகோல் ஷூப்மான் கில் சொல்கிறார்

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : புஜாரா அதிக அளவிலான பந்துகளை சந்திப்பது இளம் வீரர்களுக்கு ஒரு அளவுகோல் என்று ஷூப்மான் கில் தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக...

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதற்கு புஜாராவின் பேட்டிங் முதுகெலும்பாக இருந்தது. 500 ரன்களுக்கு மேல் குவித்த புஜாரா, களத்தில் நிலையாக நின்று 1200-க்கும் மேற்பட்ட பந்துகளை சநித்தார். ரஞ்சி டிராபியில் 19 வயது இளம் வீரரான ஷூப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 268, 148, 69, 91 என அசத்தியுள்ளார்.

500 ரன்களுக்கு...

புஜாராவை போல் 500 ரன்களுக்கு மேல் குவிக்கலாம், ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்துகளை சந்திப்பது எளிதான காரியம் அல்ல. அது இளைஞர்களுக்கான அளவுகோல் என்று ஷூப்மான் கில் தெரிவித்துள்ளார். புஜாரா குறித்து ஷூப்மான் கில் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டியில் ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களால் மட்டுமே நாள் முழுவதும் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய இயலும். ஒரே தொடரில் புஜாரா 1200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். இது உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. பேட்ஸ்மேன்களால் 500 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதிக அளவிலான பந்துகளை சந்தித்தது இளம் வீரர்களுக்கான அளவுகோல்.
விரும்பி பார்ப்பேன்...

களத்தில் நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது சிறப்பானது. அவரது பேட்டிங் விரும்பி பார்ப்பேன். தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றனர்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து