ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு

புதன்கிழமை, 9 ஜனவரி 2019      விளையாட்டு
indian team 2019 01 09

மும்பை : ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 8 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியா நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

126 புள்ளிகளுடன்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

நம்பர் ஒன் இடத்திற்கு...

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த எட்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிவிடும். தென்ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 5-0 எனக் கைப்பற்றினால் பாகிஸ்தான் 4-வது இடத்திற்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து