தமிழக அரசு பஸ்கள் பம்பை வரை இயக்கம் - அனுமதி அளித்தது கேரள ஐகோர்ட்டு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Kerala High Court 2018 10 24

திருவனந்தபுரம் : தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை தற்போது திறந்துள்ளது. சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் செல்வார்கள். பல பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டும் செல்கின்றனர்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்கள் பக்தர்களின் போராட்டம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மட்டுமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும். வழக்கமாக தமிழக அரசு பஸ்களும் சபரிமலை சீசன் காலங்களில் பம்பை வரை சென்று வந்தன. இந்த ஆண்டு தமிழக அரசு பஸ்கள் நிலக்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இது குறித்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. இதனால் கேரள ஐகோர்ட்டில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து