டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      இந்தியா
Prakash Raj meet Kejriwal 2019 01 10

புது டெல்லி : டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.  இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று சந்தித்த பிரகாஷ்ராஜ் அவருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்த சந்திப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து