முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு ரூ.1000 யார், யாருக்கு கிடைக்கும்?

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இது குறித்து உணவு வழங்கல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது,

பொங்கல் பண்டிகை பரிசுத் தொகை ரூ. 1000 வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் நகல் நேற்று முன்தினம் இரவுதான் தலைமை செயலாளர் மற்றும் உணவு வழங்கல் துறை செயலாளருக்கு கிடைத்தது. கோர்ட் உத்தரவை ஏற்று ரூ. ஆயிரம் ரொக்கப் பணம் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

20 கிலோ அரிசி வாங்கக் கூடிய ரேசன் கார்டுதாரர்கள் அந்நியோஜனா, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 25 கிலோ அரிசி பெறக் கூடியவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்புடன் ரூ. ஆயிரம் வழங்கப்படும். சர்க்கரை பெறக் கூடிய வெள்ளை நிற ரேசன் கார்டுதாரர்கள் மற்றும் எந்த பொருளும் வேண்டாம் என்று முகவரி சான்றாக பெற்றுள்ள  என் ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு பொங்கல் பொருட்கள் மட்டும் விநியோகிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் சர்க்கரை பெறக் கூடிய 10 லட்சத்து 45 ஆயிரம் ரேசன்கார்டுதாரர்களும், எந்த பொருளும் வாங்காத என் கார்டுதாரர்கள் 45 ஆயிரம் பேரும் உள்ளனர். இவர்கள் மட்டும்தான் கோர்ட் உத்தரவுப்படி ரூ. ஆயிரம் பணம் பெற இயலாது. மற்றவர்களுக்கு தொடர்ந்து பொங்கல் பொருட்களும், ரூ. ஆயிரம் ரொக்கமும் விநியோகிக்கப்படும். வரும் 14-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். சர்க்கரை ரேசன்கார்டுதாரர்கள் வந்தால் அவர்களிடம் கோர்ட் உத்தரவு குறித்து தன்மையாக எடுத்துக் கூறி அனுப்பும்படி ரேசன்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து