முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக குத்து சண்டை தரவரிசை: முதல் இடம் பிடித்தார் மேரி கோம்

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவின் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்து சண்டை தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

தங்கம் வென்றார்...

இந்தியாவின் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 36). மணிப்பூரை சேர்ந்த கோம் 3 குழந்தைகளுக்கு தாயானவர்.  இவர் கடந்த 2001ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வெள்ளி பதக்கம் வென்றார். அதற்கு அடுத்து நடந்த 5 சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் தங்க பதக்கம் வென்றார். இறுதியாக 2010ம் ஆண்டில் 48 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றார்.

6வது முறையாக...

கடந்த 2018ம் வருடத்தில் டெல்லியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோட்டாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்த பிரிவில் 6வது முறையாக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

1,700 புள்ளிகள்...

இந்த நிலையில், சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்து சண்டை போட்டிக்கான தரவரிசை பட்டியலில், 1,700 புள்ளிகள் பெற்று முதல் இடத்தினை கோம் பிடித்துள்ளார். 1,100 புள்ளிகளுடன் ஒகோட்டா 2வது இடம் பிடித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து