எதிர்க்கட்சித் தலைவராக விரும்பாத பாஜகவின் 3 முன்னாள் முதல்வர்கள் - தேசிய துணைத்தலைவர்களாக தேர்வு

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      இந்தியா
Shivraj  Raman Singh   Vasundhara Raje 2019 01 11

புதுடெல்லி : பாஜகவின் மூன்று முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், ராமன் சிங் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் தம் தோல்விக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர்களாக விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால், அந்த மூவரையும் தம் கட்சியின் தேசிய துணைத்தலைவர்களாக நியமித்துள்ளார் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா.

தொடர்ந்து மூன்று முறை சத்தீஸ்கரில் ராமன்சிங் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங்கும் பா.ஜ.க.வின் முதல்வர்களாக இருந்தனர். ராஜஸ்தானில் இருந்த பா.ஜ.க. ஆட்சியில் வசுந்தரா முதல்வர் பதவியில் இருந்தார்.

இந்த மூன்று மாநிலங்களுக்கும் கடந்த மாதம் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தன் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதில், சத்தீஸ்கர் தவிர மற்ற இரு மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு படுதோல்வி ஏற்படவில்லை. எனினும், அம்மூன்று மாநிலங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர்களாக பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர்கள் தொடர விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த மூன்று முன்னாள் முதல்வர்களையும் பா.ஜ.க. மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டது.

இதையடுத்து சிவராஜ், ராமன் சிங் மற்றும் வசுந்தரா ஆகியோர் பா.ஜ.க.வின் தேசிய துணைத்தலைவர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மீதான உத்தரவு  வெளியாகி உள்ளது. இந்த மூன்று தலைவர்களும் தாம் ஆட்சி செய்த மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்காகப் பாடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து