என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமில்லாதவை'-அலோக் வர்மா

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      இந்தியா
alok varma cbi director 2019 01 09

புதுடெல்லி  : சி.பி.ஐ. இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அற்பமான, பொய்யான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது. இவை அனைத்தும் எனக்குப் பகையான ஒரு நபரால் (ராகேஷ் அஸ்தானா) உருவாக்கப்பட்டவை.

சி.பி.ஐ. இயக்குநராக என்னுடைய வருங்காலத்தை நிர்ணையிக்கும் பொறுப்பை மேற்கொண்ட குழுவின் ஆணைக்கு இணங்கும் நிலைக்கு மாற்றப்பட்டேன். சி.பி.ஐ. நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதைக் காத்திருக்கிறேன். மீண்டும் இயக்குநர் பொறுப்பு என்னிடம் வழங்கப்படும் எனில், சட்ட விதிகளின்படி, அதையே திரும்பச் செய்வேன்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் கடந்த அக்டோபர் 23-ல் வெளியான சி.வி.சி. உத்தரவுகளும் என்னுடைய உண்மைக்கான ஆதாரங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்திய சுமார் 2 மணி நேரக் கூட்டத்துக்குப் பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக மீண்டும் நியமித்தது. மேலும் தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது. இந்நிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து