சபரிமலை விவகாரத்தில் வன்முறை கவர்னரை சந்தித்து பினராயி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 11 ஜனவரி 2019      இந்தியா
pinarayi-vijayan 2018 10 19

திருவனந்தபுரம், : கேரள முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில கவர்னர் சதாசிவத்தை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தார்.  

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை பிந்து, கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்

இதனால் கேரளாவில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அரசு பஸ்கள், கடைகள், கட்சி அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி மத்திய உள்துறை, கேரள கவர்னர் சதாசிவத்திடம் அறிக்கை கேட்டது. இதை தொடர்ந்து கவர்னரும் அறிக்கையை அனுப்பினார்.

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன்   திடீரென்று கவர்னர் சதாசிவத்தை சந்தித்து பேசினார். அப்போது கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் அது தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும் தனது விளக்கத்தை கவர்னரிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

முழு அடைப்பு போராட்டத்தின்போது கேரளாவில் நடந்த வன்முறை தொடர்பாக 1,137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில தொடர்புடைய 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட 10 ஆயிரத்து 24 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 ஆயிரத்து 193 பேர் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து